அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக், நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் 9.9 சதவிகித பங்குகளை வாங்கியது.
இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு சந்தையில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேந்த சில்வர் லேக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை ₹ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
“அனைத்து இந்தியர்களின் நலனுக்காக இந்திய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்ப்பதற்கும் மாற்றுவதற்கும், சில்வர் லேக்கை மதிப்புமிக்க பங்களிப்பாளராக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.