பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது 70% அதிக வேகத்துடன் பரவும் தன்மை கொண்டது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோன வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே