ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று மீண்டும் கூறி சர்ச்சையை எழுப்பியுள்ள சர்மா ஒலி

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்த நிலையில் கடந்த ஆண்டுதான் இதற்கு விடிவு காலம் ஏற்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் பிரதமர் மோடி இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாள பிரதமர் ஒலி அவர்கள் ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும்; உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது என்றும்; எனவே அவர் நேபாள கடவுள் என்றும் கூறினார்.

நேபாள் பிரதமர் ஒலியின் இந்த கருத்துக்கு இந்து மத தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவுக்கு எதிராக நேபாள பிரதமர் ஒலி ஒருசிலர் கருத்துக்களை தெரிவிப்பு வருவதை அடுத்து தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கும் நிலையில் திடீரென மீண்டும் ராமர் இந்தியாவில் உள்ள அயோத்தியில் பிறக்கவில்லை என்றும் அவர் நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே