மகளிடம் பாலியல் தொல்லை..; சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இரு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு, சாகும்வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கன்னி ராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து, தனது 10 மற்றும் 12 வயதான 2 மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கீழக்கரை போலீசார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுபத்திரா, குற்றவாளி மாரிமுத்துக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே