பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலை தளங்களில் வீடியோக்களை பதிவு செய்வது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் பொழுதுபோக்காக இருந்தது.
ஆனால் தற்போது அதில் அதிகமான வருமானம் கிடைப்பதால் அதிக பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய விஷயங்கள் வீடியோக்களாக பதிவு செய்யப்படுகின்றன
பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள், பொய்யான தகவல்கள் கொண்ட வீடியோக்கள், வதந்திகளை பரப்பும் வீடியோக்கள், கிசுகிசுக்கள் கொண்ட வீடியோக்கள் ஆகியவை யூடியூபில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருவதால் இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சினிமாக்களுக்கு இருப்பது போல் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் உள்ள வீடியோக்களையும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே வலுத்து வருகிறது.
ஏற்கனவே ஓடிடியில் வெளியாகும் படங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதால் அதற்கும் சென்சார் வேண்டும் என்று கூறப்படும் நிலையில் தற்போது சமூக வலை தளங்களில் உள்ள வீடியோக்களுக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.