இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (பிப்.26)காலமானார். அவருக்கு வயது 88.

சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில நாள்களாக தா.பாண்டியனின் உடல்நிலை மோசமடைந்ததால், புதன்கிழமை அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செயற்கை சுவாசக் கருவியுடன் தா.பாண்டியனுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று (பிப்.25) காலை தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே