சாத்தான்குளம் சம்பவம் : முதல்வரை விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணை

சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸாா் தாக்கியதில் வியாபாரிகளான தந்தை, மகன் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

அதில் கைது செய்யப்பட்டுள்ள 10 போ மீது கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முதலில் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை மற்றும் மகன் இருவரும் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்கள் என்று கூறிருந்தார்.

எனவே இதுதொடர்பாக அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவானது வியாழனன்று விசாரணைக்கு வருகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே