தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர்.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
தந்தை, மகன் உயிரிழந்த இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், 10 குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த சாத்தான்குள அரசு மருத்துவர் வெண்ணிலா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 15 நாட்கள் விடுப்பில் சென்றார்.
இந்த நிலையில், விடுப்பில் சென்ற மருத்துவர் வெண்ணிலா திருச்செந்தூர் விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவர் வெண்ணிலா அளித்த சான்றிதழ் அடிப்படையிலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறைக்கு அனுப்பபட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.