சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை அவர் வரவேண்டும்.

இந்த நாட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர் சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி பெரியார் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை பெரியார் குறித்து ரஜினி பேசி இருப்பது யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நடந்த நிகழ்வை மட்டுமே ரஜினி கூறினார்.

பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்து கொள்ளட்டும். ரஜினியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்றது என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே