சாம்சங் கேலக்ஸி ஏ-12 சிறப்பு அம்சங்கள்..!!

சாம்சங் கேலக்ஸி மாடலில் புதிய வகை ஸ்மார் போனான ஏ-12 இந்திய சந்தைகளில் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள கேலக்ஸி மாடலின் அடுத்தக்கட்ட தயாரிப்பாக ஏ-12 மாடல் வெளியாகியுள்ளது.

நான்கு கேமராக்களுடன், கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய மூன்று வகையான வண்ணங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ-12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சேங் கேலக்ஸி ஏ-12 மாடலில் 48MP பின்பக்கக் கேமராவுடன், 5MP அல்ட்ரா வைட் கேமராவும், 2MP மாக்ரே கேமராவும், 2MP டெப்த் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் 8MP கேமரா வழங்கப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி அம்சத்துடன் அதிவேகமாக சார்ச் செய்யும் வகையில் 15W சார்ஜிங் தொழில்நுட்பமும் செல்போனின் இணைக்கப்பட்டுள்ளது. 

இது இந்திய சந்தைகளில் அனைத்து கடைகளிலும், இணையதளங்களின் வாயிலாகவும் சாம்சேங் கேலக்ஸி ஏ-12 விற்பனை செய்யப்படுகிறது.

4 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.12999 ஆகவும், 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ.13999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போன் ஆனது சில்லறை கடைகள், samsung.com மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் இன்று முதல், அதாவது பிப்ரவரி 17, 2021 முதல் வாங்க கிடைக்கும்.

கேலக்ஸி ஏ சீரிசில் வெளியாகியுள்ள ஏ-12 மாடலை வெளியிட்டு 2021-ம் ஆண்டை எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளதாக சாம்சங் இந்தியாவின் விற்பனைப் பிரிவு இயக்குநரான ஆதித்யா பாபர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே