கொரோனா காலத்தில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவல்துறை சார்பில் “சலாம் சென்னை” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிப்ரான் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் நடித்த இந்த குறும்படத்தை, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர்.