கோவிட்-19: மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்!…

இந்தியாவில் இதுவரை 4,25,282 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13699 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,37,196 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,74,387 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குணமடையும் விகிதம் 55.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 132075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6170 உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை 59746 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 59377 பேருக்கும், குஜராத்தில் 27260 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 11903 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் – 48

ஆந்திர பிரதேசம் – 8999

அருணாச்சல பிரதேசம் – 135

அசாம் – 5388

பீகார் – 7612

சண்டிகர் – 406

சத்தீஸ்கர் – 2275

தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 88

டெல்லி – 59746

கோவா – 754

குஜராத் – 27260

அரியானா – 10635

இமாச்சல பிரதேசம் – 673

ஜம்மு – காஷ்மீர்- 5956

ஜார்க்கண்ட் – 2073

கர்நாடகா – 9150

கேரளா – 3172

லடாக் – 837

மத்திய பிரதேசம் – 11903

மகாராஷ்டிரா – 132075

மணிப்பூர் – 841

மேகாலயா – 44

மிசோரம் – 141

நாகலாந்து – 211

ஒடிசா – 5160

புதுச்சேரி – 366

பஞ்சாப் – 4074

ராஜஸ்தான் – 14930

சிக்கிம் – 78

தமிழ்நாடு – 59377

தெலுங்கானா – 7802

திரிபுரா – 1221

உத்தரகாண்ட் – 2344

உத்தர பிரதேசம் – 17731

மேற்கு வங்காளம் – 13945

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள்-7832

மொத்தம் – 425282.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே