தீபாவளியன்று சென்னையில் காற்றுமாசு, ஒலிமாசு அதிகரிக்கவில்லை – மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னையில் கடந்த தீபாவளியை விட காற்று, ஒலி மாசு 4 முதல் 6 டெசிபல் வரை குறைந்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 97லிருந்து 107ஆக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஓட்டி பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் காலை 1 மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று தீபாவளி நாளில் சென்னையில் காலையை விட மாலை நேரத்தில் காற்று மாசு அதிகரித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காற்றில் நுண்துகல்களின் அளவு 57-ஆக இருந்த நிலையில்  பட்டாசு வெடிக்கப்பட்டதின் விலைவாக இன்று காலை 108-ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காற்றின் மாசு குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மணியில்  காற்று மாசு தரகுறியீடு 200-ஆக பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக அரும்பாக்கத்தில் 131-ஆகவும், வேளச்சேரியில் 92-ஆகவும், ஆலந்தூரில் 91-ஆகவும், ராயபுரத்தில் 78-ஆகவும் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி, சவுக்கார்ப்பேட்டை நிலைய ஆய்வில் காற்றில் உள்ள நுண்துகள்கள் அளவு கூடுதலாக உள்ளது.

கார்ப்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு நிர்ணையிக்கப்பட்டதை விட குறைவாகவே இருந்தது.

ஒலி மாசின் அளவும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு உட்பட்டே இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே