மும்பை சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு பிடித்த தீ 12 மணி நேரத்தையும் கடந்து தொடர்ந்து எரிவதால், அது ஐந்தாம் நிலை தீ விபத்தாக அறிவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் 24 தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நான்கு மாடி மாலில் இரண்டாம் மாடியில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு 8.30 மணி அளவில் தீ பிடித்தது.

தீ மளமளவென பரவியதால், மாலில் இருந்த 300 பேரும் அருகில் உள்ள 55 மாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 3500 பேரும் அவசரம் அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் தீ மேலும் பல கடைகளுக்குப் பரவியது.

5 ஆம் நிலை தீவிபத்து என அதிகாலை 2.42 மணிக்கு அறிவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் 250 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

16 பிரம்மாண்ட டாங்குகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

தீயணைப்பு பணியில் 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே