டெல்லி விமான நிலையத்தில் கிடந்த பையில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து

டெல்லி விமானநிலையத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பையிலிருந்து ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை 1 மணியளவில், 3வது டெர்மினல் பகுதியில் கருப்பு நிறப் பை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கீழே கிடந்துள்ளது.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில்பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், சந்தேகத்திற்கிடமான வகையில் கிடந்த அந்த பையை  கண்டெடுத்துள்ளார்.

இதையடுத்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு டிடெக்டர் கருவி மூலம் அந்தப் பையை சோதனையிட்டதில், அதனுள் வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பரப்பரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் பையைக் கொண்டு வந்தது யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே