வீடு இடிந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி – முதலமைச்சர் அறிவிப்பு..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் மசூதி தெருவில் இருந்த வீட்டின் சுவர் கனமழை காரணமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே