கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள் – சுந்தர் பிச்சை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து பல உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமெரிக்கா ரஷ்யா உள்பட பல நாடுகள் இந்தியாவுக்கு மருத்துவ உதவி உள்பட பல்வேறு உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் மருந்துப் பொருட்களையும் அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்களும் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

இந்தியாவுக்காக 135 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருந்துகள் உள்பட பொருட்களை அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார். 

யூனிசெப் அமைப்புடன் இணைந்து இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு இந்திய அரசு நன்றி தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே