தமிழகத்தில் துயர சம்பவங்களில் இறந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

‘விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆதிச்சனூர் கிராமத்தில் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த திரு. சுப்புராயன் என்பவரின் மகன் திரு. முருகன் என்பவர் மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த திரு. அங்கமுத்து என்பவரின் மகன் திரு. கந்தசாமி என்பவர் எதிர்பாராத விதமாக தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், திட்டவிளை பகுதியைச் சேர்ந்த திரு.முத்துநாயகம் என்பரின் மகன் திரு. ஏசுதாஸ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கிள்ளியூர் வட்டம், கிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஜெகதீஷ் என்பரின் மகன் சிறுவன் ஜெர்சின் என்பவர் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு ஆ கிராமத்தைச் சேர்ந்த திரு. வர்க்கீஸ் என்பவரின் மகன் திரு. ஷிபு என்பவர் மீன்பிடி பணியின் போது, படகு சாய்ந்ததில், கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த திரு. இக்னேஷியஸ் என்கிற தோமா என்பவர் மீன்பிடி பணியின் போது, படகிலிருந்து தவறி கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. கலைஞர் என்பவரின் மகன் சிறுவன் கலாநிதிமாறன் என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்  என்ற செய்தியையும்;

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோகி கிராமத்தைச் சேர்ந்த திரு. பக்கிரிசாமி என்பவரின் மகன் திரு. கரும்பாயிரம் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் வட்டம், வடக்குப்பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடுக்காட்டான் என்பவரின் மகன் திரு. பாஸ்கர் என்பவர் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த திரு. சிவக்குமார் என்பவரின் மகன் சிறுவன் ஆதித்யா மற்றும் திரு. சக்திவேல் என்பவரின் மகள் சிறுமி பாரதி ஆகிய இருவரும் செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கூனிமேடு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமச்சந்திரன் என்பவரின் மகன் திரு. வேல்முருகன் என்பவர் மீன்பிடி பணியின் போது தவறி விழுந்து, கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், திருப்புட்குழி கிராமத்தைச் சேர்ந்த திரு. சோமு என்பவரின் மகன் செல்வன் கஜன் மற்றும் திரு. விவேகானந்தன் என்பவரின் மகன் சிறுவன் ஜெகப்பிரியன் ஆகிய இருவரும் தாமரை குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த திரு. சின்னராஜ் என்பவரின் மகன் திரு. ஜீவானந்தம் என்பவர் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது, மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ரெங்கராஜ் என்பவரின் மகன் திரு. விஜய் என்பவர் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாவினிப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த திரு. பிரேம்குமார் என்பவரின் இரண்டு குழந்தைகள் மகா விஷ்ணு மற்றம் அஜிவித்யாஸ்ரீ ஆகிய இருவரும் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. கருப்பணன் என்பவரின் மகன் திரு. குருசாமி என்பவர் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், திருபாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாணிக்கம் என்பவரின் மகன் திரு. ஜெயபால் என்பவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கள்ளக்குறிச்சி வட்டம், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. இளங்கோ என்பவரின் மகள் செல்வி கனிமொழி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன்கள் சிறுவன் ஜெகதீஸ்வரன் மற்றும் சிறுவன் விகாஸ் ஆகிய இருவரும் வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

ராமநாதபுரம் வட்டம், காந்திநகரைச் சேர்ந்த திரு. சுரேஷ்குமார் என்பவரின் மகன் சிறுவன் ஜெப்ரி ரோஹித் என்பவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ரவிச்சந்திரன் என்கிற ரவி என்பவரது மகன் திரு. ரஞ்சித் என்பவர் கொட்டரை நீர் தேக்கத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே