“ரவுடி பேபி” பாடல் 100 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை..!!

தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது. பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு தனுஷுக்கு புகழை கொடுத்தது அப்பாடல்.

இதற்கு அடுத்தபடியாக தனுஷ் -யுவன்சங்கராஜா கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் உருவானது ‘ரவுடி பேபி’பாடல். இப்பாடல் கொலைவெறி ஹிட்டையும் தாண்டியிருக்கிறது.

சாய்பல்லவி நல்ல டான்சர் என்பதாலும், இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்ததாலும் பாடல் மேலும் பிரபலமடைந்தது.

யூடியூப்பில் இப்பாடலை தினந்தோறும் ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள். இதுவரையிலும் 100 கோடி பார்த்துள்ளனர்.

100 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது இப்படாடல். மேலும் 4 மில்லியன் லைக்ஸ்களையும் இப்பாடல் பெற்றிருக்கிறது.

கொலைவெறி பாடல் வெளியாகி 9ஆவது ஆண்டில் ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என்று வந்த செய்தியால் தனுஷ் உற்சாகத்தில் இருக்கிறார்.

ரசிகர்களும் #RowdyBabyHits1Billion என்ற ஹேஷ்டேக்கினை இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கி மகிழ்ந்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே