அமெரிக்க நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க 94.5 சதவிகிதம் பயன்திறனுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடைசி கட்ட சோதனை முயற்சியின் இடைக்கால முடிவுகளின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசி 90 சதவிகிதம் பயன்திறனுடன் செயல்படுவதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் 92 சதவிகிதம் பயன்திறனுடன் செயல்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே