உ.பி.யில் “கங்கை ஆரத்தி” – பிரதமர் மோடி பங்கேற்பு..!!

கங்கை நதிக்கரையில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.800 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோவிலை இன்று (டிச.13) திறந்து வைத்த பிரதமர் மோடி, கங்கை நதிக்கரையில் புனித நீராடினார்.

இதையடுத்து மாலை கங்கை நதிக்கரையில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்றேறனர். முன்னதாக ஆரத்தி நிகழ்ச்சியை யொட்டி கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே