அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரிப்பு – தமிழக அரசு

அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்பட தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஒய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே