குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு…!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

இதனை பிரிட்டனைச் சேர்ந்த உறுப்பினர் சஃபக் முகம்மது கொண்டுவந்தார். இதன்மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வாக்கெடுப்பை தடுத்து நிறுத்த இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து, வாக்கெடுப்பை மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கலாம் என்று ஐரோப்பிய மக்கள் கட்சிக் குழு வலியுறுத்தியது.

ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வர உள்ள நிலையில், அவர்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கம் கேட்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடிவுசெய்யப்பட்டது.

இதன்படி, மார்ச் மாதத்தில் மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்த பிரிட்டனைச் சேர்ந்த உறுப்பினரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே