கேப்டன் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு கரோனா பாசிட்டிவ் என்று சோதனையில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் டி20 தொடருக்காக சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலதுகை மிதவேகப்பந்துவீச்சாளர் உள்பட பல்வேறு ஊழியர்களுக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரெய்னா சொந்தப்பிரச்சினைகளுக்காக இந்த ஐபிஎல் தொடரிலிருந்தே திடீரென விலகியுள்ளார், என்ன காரணம் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சிஎஸ்கேயின் மற்றொரு வீரரான ருதுராஜ் கெய்க்வாடுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிஎஸ்கே நிர்வாகம் இது பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்ற நிலையில் பிரபல இதழுக்கு கிடைத்த உறுதியான தகவல்களின்படி ருதுராஜ் கெய்க்வாட் என்ற மகாராஷ்ட்ரா மட்டையாளர் 4வது டெஸ்ட் எடுத்துக் கொண்டதில் பாசிட்டிவ் என்று வந்திருப்பதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமையன்று தீபக் சாஹருக்கு பாசிட்டிவ் என்று வந்தது. இப்போது ருதுராஜ் கெய்க்வாட், 4வது டெஸ்ட்டை அனைத்து வீரர்களும் எடுத்துக் கொள்வது அவசியம்.