நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. அதீத கனமழை பெய்யும்… வானிலை மையம்!!

நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் எதிரொலியாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

இதுதவிர, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர், மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே