புரட்டாசி விரதம் இன்றுடன் முடிவதால் காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இந்துக்கள் விரதம் இருப்பர். அப்போது அசைவம் சாப்பிடாமல் அந்த மாதம் முடிந்ததும் அசைவம் சாப்பிடுவது வழக்கம். இன்றுடன் புரட்டாசி மாதம் நிறைவடைவதால் மக்கள் அசைவம் வாங்க கடைகளில் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா விதிமுறைகளில் இருந்து தளர்வுகள் அளிக்கபட்ட நிலையில் சென்னை காசி மேடு மீன் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
மீன்வரத்து அதிகமான அளவில் இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில் இன்று எதிர்பாராத அளவில் கூட்டம் இல்லை எனவும் நாளை அதிக அளவில் மக்கள் மீன் சந்தைக்கு என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.