செப்டம்பர் 7-ம் தேதிக்கு பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார்

செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக அரசு கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.மொத்தமாக தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம் மற்றும் திருவெற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 -ஆம் தேதி வரை இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில்,குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். 

செப்டம்பர் 7 -ஆம் தேதி பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே