ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை

ரவா ஃபிங்கர் ஃப்ரை என்பது நம் கை விரல் போன்று இருக்கும். வாயில் வைத்ததும் மொறு மொறுவென்று கடித்து ரசித்து சாப்பிட வைக்கும் இந்த ரெஸிபி உருளைக்கிழங்கு மற்றும் ரவையைப் பிரதானமாக வைத்து செய்யப்படுகிறது.ரவையுடன் மசாலாக்கள் சேர்த்து காரசாரமாக கலக்கப்பட்ட கலவையை விரல் வடிவில் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்துசெய்யப்படும் இந்த ரெஸிபி சுவைக்கூட்டும்.பொதுவாகவே உருளைக்கிழங்கை வைத்து செய்யப்படும் ரெஸி பிக்கு தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக விரல் போன்று நீண்டிருக்கும் இந்தஃபிங்கர் ப்ரை உங்கள் மாலை நேரத்தையும் பண்டிகைக் காலத் தையும் இனிதாக்கும்.

முக்கிய பொருட்கள்
3 medium உருளைக்கிழங்கு
1 கப் ரவை மாவு
பிரதான உணவு
2 கப் நீர்
தேவையான அளவு கறிவேப்பிலை
1 கைநிறைய நறுக்கிய கொத்தமல்லி இலை
4 Numbers நறுக்கிய பச்சை மிளகாய்
1 medium நறுக்கிய வெங்காயம்
தேவையான அளவு உப்பு
How to make: ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை
Step 1:
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
Step 2:
அதில் கொஞ்சம் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
Step 3:
கொதிக்கும் நீரில் ரவையை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளறுங்கள்.
Step 4:
நிமிடங்கள் மிதமானத் தீயில் வைத்து அதை வேறொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.
Step 5:
ஒரு பெளலில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி இலைகள், வேக வைத்த ரவை மற்றும் கறிவேப்பிலை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Step 6:
அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
Step 7:
இப்பொழுது கலவையை கொஞ்சம் எடுத்து விரல் நீளத்திற்கு சிப்ஸ் மாதிரி உருட்டுங்கள். உங்களுக்கு பிடித்த வடிவில் கூட நீங்கள் தட்டிக் கொள்ளலாம்.
Step 8:
வாணலியில் எண்ணெயில் வைத்து சூடானதும் விரல் வடிவத்தில் உருட்டிய உருளைக்கிழங்கு ஃபிங்கரை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.
Step 9:
சூடாக இனிப்பு சாஸ் அல்லது க்ரீன் சட்னியுடன் தொட்டு சாப்பிடுங்கள். மொறுமொறுப்பாக கரகரப்பாக இருக்கும் இதை மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.மாலை நேர சிற்றுண்டி திடீர் விருந்தினர்களை அசத்தவும் ஏற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே