விரத காலத்திற்கு ஏற்ற டோக்லா

பண்டிகைக் காலகட்டத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவதை சிலர் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். விரதம் இருந்து இறைவனை வழிபடுவதால் அவர் அருள் விரைவில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஜவ்வரிசி கிச்சடி, ஜவ்வரிசி வடை, சாமை சாதம் போன்ற உணவுகளை விரத காலங்களில் உண்ணுவார்கள். இந்த வகையில் டோக்லா எனும் ஒரு உணவு வகை, விரத காலங்களில் மட்டுமல்லாமல் நமது தினசரி உணவாகவும் உண்ணக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். பஞ்சு போல் மென்மையாக இருக்கும் இந்த உணவின் ருசியும் அலாதியாக இருக்கும். மேலும் இந்த உணவில் க்ளுட்டன் இல்லாத காரணத்தால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. உடல்நலத்தில் அதிக அக்கறை உள்ளவர்களுக்கு இது ஒருஇனிப்பான செய்தியாகும். வாருங்கள், இதனைத் தயாரிக்கும் முறையைப்பற்றி இப்போது பார்க்கலாம்.
முக்கிய பொருட்கள்
1 கப் பொடியாக்கப்பட்ட சாமை அரிசி
1/4 கப் பொடியாக்கப்பட்ட சவ்வரிசி
பிரதான உணவு
1/2 கப் தயிர்
1/2 கப் நீர்
1 தேக்கரண்டி மிளகாய் பூண்டு பேஸ்ட்
1/4 தேக்கரண்டி சோடா
1 தேக்கரண்டி இந்து உப்பு
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
வெப்பநிலைக்கேற்ப
1 தேக்கரண்டி சீரக விதைகள்
அழகூட்டுவதற்கு/ அலங்கரிப்பதற்கு
1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
2 கைப்பிடியளவு வெட்டிய துண்டுகள் பச்சை மிளகாய்
How to make: விரத காலத்திற்கு ஏற்ற டோக்லா
Step 1:
ஜவ்வரிசி மாவு, தயிர், உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, நன்றாகக் கிளறிக் கொள்ளவும். 2-3 நிமிடங்களுக்குப் பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும். பின்னர் மேலே கூறிய எல்லா மூலப் பொருட்களையும் இந்த கலவையுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும். பின்னர் 5-10 நிமிடங்கள் நன்றாக ஊறவிடவும்.
Step 2:
இந்தக் கலவையில் ஊற்றப்பட்ட நீர் நன்றாக உறிஞ்சப்பட்டு, கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும். டோக்லா மாவு, மென்மையாக க்ரீம் போல் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும். பின்னர், சிறிதளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துவிடவும்.
Step 3:
ஒரு தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். டோக்லா மாவை அந்தத் தட்டில் பரப்பி, ஒரேசீராக தடவிவிடவும். இப்போது ஒரு பேனில் இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். தண்ணீர் சூடானவுடன், டோக்லா மாவு நிரப்பப்பட்ட தட்டை அந்தப் பேனில் வைத்து மூடவும். அடுத்த 10-15 நிமிடங்கள் ஆவியில் மாவு நன்றாக வேகட்டும்.
Step 4:
மறுபுறம், ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும், நறுக்கி வைத்திருந்த பச்சை மிளகாய், கடுகு மற்றும் சீரகத்தை எண்ணெய்யில் சேர்த்து தாளிக்கவும்.
Step 5:
ஆவியில் வேகவைத்த டோக்லா வெந்து தயாரானதும், அதனை உங்கள் விருப்பத்திற்கு வெட்டி துண்டுகளாக்கி, அதன்மேல் பச்சை மிளகாய் மற்றும் சீரகம், கடுகு தூவி அலங்கரிக்கவும். புதினா அல்லது கொத்துமல்லி சட்னி செய்து இந்த சுவையான டோக்லாவுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே