வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் சிறப்பு முகாம்..!!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள வசதியாக 4 நாள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, சத்ய பிரதா சாஹூ தலைமையில் சென்னை – தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் சத்ய பிரதா சாகு வெளியிட்ட அறிக்கையில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16 ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள வசதியாக வருகிற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே