ராஜீவ் கொலை வழக்கு.. பன்முக விசாரணை செயல்பாட்டில் உள்ளதா? : மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா? என்பது குறித்து 19ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோர் லண்டனில் உள்ள முருகனின் சகோதரருடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயாருடனும் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி நளினியின் தாய் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதிப்பதால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் அவர்கள் இருவரும் பேசுவார்களே தவிர அமெரிக்க தேர்தல் தொடர்பாக அவர்கள் எதுவும் பேச போவதில்லை என கருத்து தெரிவித்தனர்.

மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2015 ம் ஆண்டு வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ள பன்முக விசாரணை முகமை தற்போது செய்யப்பட்டில் உள்ளதா?, அல்லது அதனுடைய விசாரணை காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே