ராஜீவ் காந்தி கொலை – ராகுல் காந்தி உருக்கமான பதில்..!!

என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களில் மத்தியில் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஒருநாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் முத்தயாபேட்டையில் மீனவ மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

இந்நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி வரும் ராகுல் காந்தி, என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

ஆனால், அவரை கொன்றவர்கள் மீது எனக்கு எந்த கோவமும், வெறுப்பும் இல்லை என்றும் அவர்களை மன்னித்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள், செல்வத்தை தரும் கடவுளாக லட்சுமியை வழிப்படும் நிலையில், இங்குள்ள பல பெண்கள் ஏன் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இல்லை? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அரசியலில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்னை நண்பர்களாக கருதாவிட்டாலும் எனக்கு அவர்களும் நண்பர்கள்தான் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே