ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகே அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்..!!

நடிகர் ரஜினிகாந்த் (ரஜினி) அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக டிசம்பர் 31-ல் அறிவிக்கப்படும் எனவும் ரஜினி கூறியிருந்தார்.

ஆனால் கொரோனா பரவல் மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தம்மால் அரசியலுக்கு வர இயலாது; அரசியல் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் திடீரென அறிவித்தார்.

இதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

இது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதன்பின்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக பல நூதன போராட்டங்களை ரசிகர்கள் நடத்தினர். 

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் திரண்டு இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஏற்கனவே சென்னை போலீசார் 36 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே