ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.

ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.

அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.

இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதன் பின் அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது 4 வாரங்களுக்குள் 11 எம்.எல்.ஏக்கள் பதிலளிக்கவும் , தமிழக சட்டசபை செயலாளர் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பின்பு 11 எம்எல்ஏக்கள் வழக்கில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில் 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் நாளை விசாரணை மேற்கொள்ள உள்ளார்.

காணொலி காட்சி மூலமாக 11 எம்எல்ஏக்களிடம் நாளை விசாரணை மேற்கொள்கிறார் சபாநாயகர் தனபால்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே