நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. இருப்பினும் பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியிட்டது. 3,645 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாக அதில் குறிப்பிட்டிருந்தது.

இதுவரை இல்லாத அளவாக 3.79 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தாலும் 2,69,507 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லை. நலமாக இருக்கிறேன். தனிமையில் இருந்து கொண்டே எனது பணியை தொடருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே