ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார். சச்சின் பைலட் அவரது ஆதரவாளர் எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து தனியாக லாட்ஜில் அறை எடுத்தும் தங்கும் அளவுக்கு சென்றது. இந்த மோதலால் அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனையடுத்து, காங்கிரஸ் தலைமையும் ராகுல் காந்தியும் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்துவைத்தனர்.

தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அது நிறைவேற்றப்படாததால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்தார்.

காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தியது. தனது ஆதரவாளர்களுக்கு மந்திரிசபையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அது நிறைவேற்றப்படாததால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்தார். இதற்கிடையே ராஜஸ்தான் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார். இந்த பணிகளுக்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஞ்சய் மக்கான் ஜெய்ப்பூர் சென்றார்.

ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. புதிய அமைச்சரவை பதவி ஏற்பதற்காக அனைத்து அமைச்சர்களும்பதவி விலகினர். இந்தநிலையில், இன்று 15 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதில், 12 பேர் அமைச்சரவைக்கு புதியவர்கள் ஆவர். 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சி பொறுப்பு ஏற்றப்பிறகு அசோக் கெல்லாட் அமைச்சரவை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விரைவில் 30 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே