ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் (Dry Fruits & Nuts) – குளிர்காலத்தில் சாப்பிடலாமா..??

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் ட்ரை ஃப்ரூட்களை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இவை குளிர் காலத்தில் உங்கள் உடலை வெது வெதுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் அனைத்தையும் செய்கிறது. ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸை இந்த குளிர்காலத்தில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

இது போன்ற உலர் பழங்களை சாப்பிட்டுவந்தால், பல நோய்களின் வரவைக் கட்டுப்படுத்தி உங்களால் ஆரோக்கியத்துடன் வாழமுடியும். ட்ரை ஃப்ரூட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது காலை உணவு, அலுவலக இடைவேளை நேரங்கள், மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். உலர்ந்த பழங்கள், எண்ணெயில் வறுத்த உணவுகளுக்கு ஆரோக்கியமான மாற்றாகும்.

அவை உங்களுக்கு மனநிறைவின் உணர்வைத் தருகின்றன, மேலும் அவை சிறந்த சிற்றுண்டி உணவாகும். இந்த ட்ரை ஃப்ரூட்ஸ்களில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பியுள்ளன, அவை குளிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

ஆரோக்கியமான ட்ரை ஃப்ரூட்ஸ்: எடை இழப்புக்கு உதவும் மற்றும் பல நாட்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளும் உலர்ந்த பழங்களில் உள்ளன. இது தவிர, உலர்ந்த பழங்களும் நம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, குளிர்காலத்தில் நீங்கள் அவசியம் சாப்பிடக்கூடிய சிறந்த உலர் பழங்களை இங்கே உங்களுக்காக தொகுத்துளோம்.,

முந்திரி: 

முந்திரி கொட்டைகள் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஒற்றைத் தலைவலியைப் (migraine pain) போக்க இது உதவுகிறது. குளிர்காலத்தில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும் சரும விரிசல் மற்றும் உலர்ந்த குதிகால் ஆகியவற்றை மென்மையாக்க முந்திரி எண்ணெய் உதவுகிறது. அவை வைட்டமின் E மற்றும் வயது-எதிர்ப்பு பண்புகளால் நிறைந்தவை, அவை குளிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை உங்களுக்கு வழங்கும். விளையாட்டு, நீச்சல் என அதிக உடல் உழைப்பைக் கொடுக்கும் குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் தினமும் முந்திரிப் பருப்பைச் முந்திரி சரியான அளவில் சாப்பிடலாம். 30 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

வால்நட்ஸ் :- 

குளிர்காலத்தில் ஒவ்வொரு நாளும் அக்ரூட் பருப்புகள் அல்லது வால்நட்ஸ் சாப்பிடுவது உங்களை சூடாக வைத்திருக்கும். அவற்றில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை அதிக கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன மற்றும் தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது, குறிப்பாக வறண்ட காலநிலையில் இவை உங்களுக்கு அதிக பலனைத் தருகிறது. வால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட்இதயத்துக்கு மிகவும் நல்லது. பலர் வால்நட் ஆயிலை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படிச் செய்வதைக் காட்டிலும் வெறும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதயப் பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும் திறன் வால்நட்டுக்கு உண்டு.

அத்திபழம்: 

அத்திபழம் அல்லது அஞ்சீர் என்பது அனைத்து முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்களுடன் வருகின்றன. அவை வைட்டமின் A, பி 1, பி 12, இரும்பு, மாங்கனீசு, கால்சியம், சோடியம், பாஸ்பரஸ், குளோரின், பொட்டாசியம் போன்றவற்றின் சாத்தியமான மூலமாகும். மேலும் இதில் அத்திப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் C, வைட்டமின் D, அயர்ன் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதயப் பிரச்னை உள்ளவர்களின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்ட அத்தி பழம் , இரத்தச் சோகை உள்ளவர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும். இவை அனைத்தும் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவை குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் ஆகும்.

பிஸ்தா : 

பிஸ்தாக்களில் அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அவை உங்கள் சருமத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள், வயதான மற்றும் தீவிர சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. குளிர்காலத்தில் புற ஊதா கதிர்கள் அதிக சக்தி வாய்ந்தவை, எனவே இந்த பிஸ்தா உங்கள் உணவு அட்டவணையில் இருப்பது அவசியம். பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் பாஸ்பரஸ் சத்து அதிகம் கிடைத்து, உடலை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கும். உடல் மினுமினுப்பாகவும், கூந்தல் வலிமையுடனும் இருக்கும். அதிக கொழுப்புச் சத்துள்ள பிஸ்தா பருப்பு, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ்.

பாதாம் : 

பாதாம் உலர்ந்த பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள், புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், வைட்டமின் E போன்றவற்றவை உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. அவை இரத்த ஓட்டம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகின்றன மற்றும் நம் உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் பாதாம் உங்கள் பசியைத் தணித்து உங்களை நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்கின்றன.

பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், அவற்றை எப்படி சாப்பிடுகிறோம் என்பதிலும் அடங்கியிருக்கிறது. பாதாம் பருப்பை பச்சையாகச் சாப்பிட்டால் பாதாமின் மேற்பகுதியில் இருக்கும் தோல்பகுதி செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அதனால் பாதாமை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்தோ அல்லது வேர்கடலையை வறுப்பதுபோல எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தோல் நீக்கியோ சாப்பிடலாம்.

அதிக சத்துகளைத் தரவல்ல உலர் பழங்களை வேலைக்கு செல்வோர் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில் சாப்பிடலாம். கொரோனா நேரத்தில், பலரும் வீட்டில் தான் இருப்போம் ஆகவே தினமும் கொஞ்சம் கொஞ்சம் இந்த உலர் பழங்களை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு குளிர்காலத்தை இதமாக கழித்திடுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே