பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

அதிலும் ஆந்திர பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,20,390 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வரும், பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மட்டுமின்றி அவரின் குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் ராஜமெளலியின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஏற்று கொள்ள அவரின் உடல்நிலை மறுப்பதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 394 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே