புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ராஜாவுக்கு மூன்று மரண தண்டனை..!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி சாமிவேல் என்ற ராஜாவுக்கு மூன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வர் 5 லட்ச ரூபாய் நிதி அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 5 லட்ச ரூபாயும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஒரு லட்சம் ரூபாயும், தேமுதிக சார்பாக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டிருந்தது. 

இதேபோல் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராஜாவுக்கு மூன்று மரண தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே