தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரபிக் கடலில் அதிதீவிர புயலாக மாறிய மஹா புயல் நாளை இரவு அல்லது 7ஆம் தேதி அதிகாலை குஜராத் அருகே கரை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே