ரயில்வே பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை, 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்கள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30-ஆம் தேதி வரை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உயர்த்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.15 ஆக வசூலிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்கால விடுமுறைகளை ஒட்டி, ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டமும் வழியனுப்பும் நபர்களின் கூட்டமும் அதிகரிக்கும் என்பதால், கூட்டத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்துவதற்காகவே இந்த விலை உயர்வு என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே