சுஜித் இறந்ததால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடாத ராகவா லாரன்ஸ்

சுஜித்தை இழந்த பெற்றோர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குழந்தை சுஜித் உயிரிழந்த சோகத்தை கேட்டு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டார் சுஜித் எனக் கூறி உள்ளார்.

சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளை ஆகி விட்டான் என குறிப்பிட்டுள்ள ராகவா லாரன்ஸ், இது போல இந்த தேசம் எங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர் இன்றி இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் என பெயரிட்டு வளர்க்கும்படி சுஜித்தின் பெற்றோரிடம் கேட்டுக் கொள்வதாக ராகவா லாரன்ஸ் வலியுறுத்தி உள்ளார்.

அப்படி குழந்தையை தத்து எடுக்க நினைத்தால், தானே குழந்தையை தத்து எடுத்துக் கொடுக்கிறேன் என்றும், குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே