இந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..!!

கொரோனா வைரஸ்க்கு (Corona Virus) எதிரான முயற்சியாக உடலை பிட்டாக வைத்துக்கொள்ள மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த ஆண்டு வாட்டர் புரூப் ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் ஸ்மார்ட் பேண்டுகளின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பல பேண்டுகள் (BAND) இதய துடிப்பு, பூட் ஸ்டேப் போன்று இன்னும் பல சேவைகளை வழங்குகிறது.

இன்னும் சில பேண்டுகளில் உங்களின் மொபைல் போனிற்கு வரும் WhatsApp மெசேஜ் மற்றும் Facebook மெசேஜ்களை உங்களின் பேண்டில் பார்த்துக்கொள்ளலாம்.

இப்போது தரமான மற்றும் சூப்பரான பேண்டுகள் பட்டியலை பார்ப்போம்.

Honor Band 5 :

ஹானர் பேண்ட் 5 (Honor Band 5) இந்த பிரிவில் புதிதாக நுழைந்துள்ளது. இந்த Band வரும்போதே அமர்களமான அமசத்துடன் வருகிறது. இது இதயத் துடிப்பு கண்காணிப்பு அம்சத்தை (Heart rate tracking feature) கொண்டுள்ளது, ஹானர் பேண்ட் 5 ஒரு சுவாரஸ்யமான AMOLED டிஸ்ப்ளே மற்றும் வாட்டர்ப்ரூப் சர்டிபிகேஷனுடன் (waterproof certification) வருகிறது. Honor நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட் பேண்டான ஹானர் பேண்ட் 5 ஐ (Honor Band 5) கடந்த ஜூலை 2019ல் அறிவித்தது. Honor Band 5ல் ப்ளட் ஆக்ஸிஜன் நிலை சென்சார் உள்ளது, இதனால் உங்கள் இரத்தத்தின் ஸ்பிஓ2 லெவலை அளவிட முடியும், இது உங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவைக் குறிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் பேண்டால் ஸ்டெப்ஸ் கவுண்ட், டிஸ்டன்ஸ் கவர்டு, கலோரி பர்ன்டு, ஆட்டோமெட்டிக் எக்ஸசைஸ் ரிகக்னைஷேஷன் மற்றும் பல போன்ற 10 வெவ்வேறு உடற்பயிற்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். ஹானர் பேண்ட் 5 (Honor Band 5) விலை – ரூ. 2,199. 

Mi Smart Band 5 :

சீன நிறுவனமான சியோமியின் (Xiaomi) மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றான அதன் Mi Smart Band தொடரின் கீழ் லேட்டஸ்ட் அறிமுகமான Mi ஸ்மார்ட் பேண்ட் 5ன் முதல் சேல் இந்தியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த பிளாஷ் விற்பனையானது பிரபல இகாமர்ஸ் தளமான அமேசான் உட்பட பல தளங்களில் நடைபெறுகிறது. Mi Smart Band 5, 1.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த பேண்டை வாங்க விரும்புபவர்கள் 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். இது ATM வாட்டர்ப்ரூப் சர்டிபிகேஷனுடன் (waterproof certification) வருகிறது. பயனர் பலவிதமான வேரைட்டிகளிலிருந்து வாட்சை தேர்வுசெய்யலாம். இந்த Mi ஸ்மார்ட் பேண்ட் 5 (Mi Smart Band 5) விலை ரூ. 2,499.

GOQii Vital ECG: 

இந்த ஈ.சி.ஜி செயல்பாட்டு டிராக்கர் பட்ஜெட் விலையில் நல்ல உடற்பயிற்சி கண்காணிப்பை வழங்குகிறது. இந்த BAND நிகழ்நேர இதய துடிப்பு மானிட்டருடன் வருகிறது, மேலும் இந்த GOQii Vital ECG மூலம் உங்கள் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும். தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப், மெயில் (Phone calls, WhatsApp, Mail) போன்ற ஆப்ஸ்களின் அறிவிப்புகளை இந்த பேண்ட் உங்களுக்கு காட்டுகிறது. வைட்டல் ஈ.சி.ஜி செயல்பாட்டு டிராக்கர் அதன் பயனர்களுக்கான BANDகளுடன் 3 மாத தனிப்பட்ட பயிற்சியை (personal coaching) வழங்குகிறது. இந்த GOQii வைட்டல் ஈ.சி.ஜியின் (GOQii Vital ECG) விலை ரூ. 4,999.

Samsung Galaxy Fit 2

இந்த புதிய சாதனம் AMOLED டிஸ்ப்ளே, சிங்கிள் சார்ஜில் 15 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் மற்றும் பல வொர்க்அவுட் முறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை மனதில் வைத்து, இந்த பிட்னஸ் ட்ராக்கர் கை கழுவும் அம்சத்துடன் வருகிறது. இது உங்கள் கைகளை சுத்தம் செய்ய அவ்வப்போது நினைவூட்டும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 ஆனது 5 ATM வாட்டர்ப்ரூப் சர்டிபிகேஷனுடன் (waterproof certification) வருகிறது. இது இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளனர். சாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 (Samsung Galaxy Fit 2) விலை ரூ. 3,999.

கார்மின் விவோஸ்மார்ட் 3 (Garmin Vivosmart 3):

கார்மின் விவோ ஆக்டிவ் 3 மியூசிக் வாட்சில் 500 பாடல்கள் சேகரித்து வைக்கலாம். இதனை ப்ளூடூத் வழியாக ஹெட்போனில் கேட்கலாம். இந்த வாட்ச்சை ‘கார்மின் பே’ மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் கொண்டு வாங்கலாம். இதன் சிறப்பம்சங்கள், 1.2 இஞ்ச் டிஸ்பிளே, 240×240 பிக்சல் ரிசல்யூசன் கொண்டது. இந்த வாட்ச் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் உடன் இணைத்து செயல்படுத்தலாம். 5 ATM அளவு வரை வாட்டர் ரெசிஸ்டண்ட் சிறப்பு கொண்டது. ஸ்மார்ட் வாட்ச் மாடல் சாதாரணமாக 7 நாட்கள் வரையும், ஜிபிஎஸ் மோடில் 13 மணி நேரமும் இயக்கலாம். இதன்மூலம் 14 நாட்கள் தொடர் செயல்பாடுகள், 7 குறிப்பிட்ட செயல்பாடுகளை சேகரித்துக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் உடல்நலம், நடைபயணம், உறக்கம் போன்றவற்றைக் கண்காணிக்க உதவுகிறது. இந்த சாதனத்தில் ANT+, ப்ளூடூத் சப்போர்ட், GLONASS, ஜிபிஎஸ், அக்சலரோ மீட்டர், காம்பஸ், தெர்மா மீட்டர், பாரோ மீட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் கார்மின் பிராண்டின் சமீபத்திய சாதனமாக ஆற்றல் நிறைந்த அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியுள்ளது. இப்போது இந்தியாவில் கிடைக்கக்கூடிய கார்மின் விவோஆக்டிவ் 3 எலிமென்ட் ஸ்மார்ட்வாட்ச், ஒரு வட்ட டயலை கொண்டுள்ளது. இதற்கு முன்பு 10 ஸ்போர்ட்ஸ் ஆப்ஸ்களை இந்த சாதனம் கொண்டிருந்தது. கார்மின் விவோஆக்டிவ் 3 தொடரில் சமீபத்திய சேர்ப்பாக இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் வருகிறது. இந்த கார்மின் விவோஸ்மார்ட் 3ஐ (Garmin Vivosmart 3) நீங்கள் ரூ. 4,199. என்ற விலையில் வாங்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே