பஞ்சாப்பை சேர்ந்த நடிகர் தீப் சித்து கைது..!!

விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் சீக்கிய கொடியேற்றிய பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்தனர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி மேற்கொண்ட விவசாயிகள் பின்னர் டெல்லி நகருக்குள் நுழைந்தனர்.

அப்போது செங்கோட்டை பகுதிக்கு வந்த அவர்கள் தேசியக் கொடியை இறக்கிவிட்டு குருத்வாரா சீக்கிய கொடியை ஏற்றினர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் அந்த கொடியை ஏற்ற காரணமானவர் பஞ்சாப் நடிகர் தீப் சித்து என தெரியவந்தது.

தீப் சித்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தேர்தலில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றியவர்.

அதன்பிறகு விவசாயிகளுக்காக சம்பு மோர்ச்சா என்ற அமைப்பை தொடங்கினார்.

தொடர்ந்து தன்னை விவசாயிகள் போராட்டத்தில் அவர் இணைத்துக் கொள்ள முயன்ற நிலையில், விவசாயிகள் அவரை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.

இந்நிலையில் காவல்துறை அனுமதியை மீறி அவர் டெல்லிக்குள் பேரணி நடத்தினார்.

மேலும் தனது ஆதரவாளர்களுடன் டெல்லிக்குள் நுழைந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

செங்கோட்டையில் மதக்கொடியை ஏற்ற அவர்தான் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அவரை டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர்.

அவர் தலைமறைவானதை அடுத்து தீப் சித்து குறித்து தகவல் அளித்தார் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் கொடுக்கப்படும் என அறிவித்தனர். இந்நிலையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த சிறப்பு பிரிவினர் நடிகர் தீப் சித்துவை கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே