கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பசியைப் போக்கிக்கொள்ள எலிகளை சுட்டு சாப்பிடுகின்றனர் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பொதுமக்கள்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார கஷ்டங்கள் அதிகரித்துள்ளதால் ஆப்பிரிக்காவின் மலாவி என்ற பகுதியில் உள்ள மக்கள் எலிகளை சுட்டு சாப்பிட்டுவருகின்றனர்.

வறுத்த வயல் எலிகளை, விற்பனையாளர்கள் மலாவியின் பிரதான நெடுஞ்சாலையில் விற்கின்றனர்.

அதாவது, இரண்டு பெரிய நகரங்களான பிளான்டைர் மற்றும் லிலோங்வே இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகளை குறிவைத்து இந்த விற்பனை நடைபெறுகிறது.

தென்கிழக்கு ஆபிரிக்க நாடு முழுவதும் உள்ள தெருக் கடைகளிலும் சந்தைகளிலும் எலிகள் விற்கப்படுகின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை இந்த பகுதியின் மிக பிரதானமான பிரச்சனையாக இருக்கிறது.

இங்கு பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலாவியின் மத்திய நிட்சியூ மாவட்டத்தைச் சேர்ந்த எலி வேட்டைக்காரர் பெர்னார்ட் சிமியோன் பேசியபோது, “வறுமையில் வாடும் எனது வாழ்க்கையில், கரோனா தொற்று நோய் புதிய சிக்கல்களைக் கொண்டு வந்துள்ளது.

நாங்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு முன்பாகவே போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது நோய் காரணமாக, விஷயங்கள் மிகவும் மோசமாகிவிட்டன.” என்று தெரிவித்துள்ளார்.

38 வயதான அவர் முதலில் ஒரு விவசாயி, ஆனால் அவர் தனது வாழ்வாதாரத்துக்காக எலிகளை வேட்டையாடுகிறார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே