சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிருபர் வெட்டிக் கொலை..!!

தாம்பரம் அடுத்த சோமங்களம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மர்மநபர்களால் வெட்டிகொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சோமங்களம் பழையநல்லூர் தளபதி தெருவில் வசிப்பவர் மோசஸ் (28). இவர் தனியார் தொலைக்காட்சியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி செய்தியாளராக பணிபுரிந்து வருகின்றார்.

இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழையநல்லூர் பகுதியில் உள்ள ஏரிகளை சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருவது தொடர்பாக தனது தொலைக்காட்சியில் செய்தி ஒன்றை ஒளிபரப்பு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமைடந்த ஏரி ஆக்கிரமிப்பாளர்கள், மோசஸுக்கு நேரில் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மோசஸ், தனது தந்தையுடன் சென்று சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார.

ஆனால் போலீசார் புகாரை ஏற்காமல், தாங்கள் பார்த்துக்கொள்வதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மோசஸ் தனது நண்பரிடம் பேசிவிட்டு வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல் மோசஸை வழிமறித்து, பட்டா கத்தியால் ஓடஓட விரட்டி வெட்டியுள்ளனர்.

மோசஸின் அலறல் சத்தம் கேட்டதும் அவரது தந்தை ஓடி வந்த நிலையில், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மோசஸை உடனடியாக ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு மோசஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த சோமங்கலம் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே