பிரிண்ட் மீடியானாலே தனி மவுசு தான்..!!

இ மீடியா எத்தனை வந்தாலும் இந்த பிரிண்ட் மீடியாவை அடிச்சுக்க ஆளே இல்ல. டிவி, வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று உடனுக்குடன் செய்திகளை தர எத்தனையோ இருந்தும்கூட, அந்த பேப்பரை வாங்கி அதை பிரிக்கும் சுகமே அலாதியானதுதான்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் உடனுக்குடன் டிவி, வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று எல்லாவற்றிலும் வந்தாலும், கைக்குள் உலகம் என்று சொல்லப்படும் செல்போன் வழியாககே இவை எல்லாவற்றையும் பார்த்துவிட முடிந்த நிலையிலும் கூட, கருத்துக்கணிப்புகள் வெளியாகும் நாளில், ஒரு புக் கூட கடைகளில் கிடைக்க மாட்டேங்குது. கடைக்கு வந்து உடனேயே எல்லாம் விற்று தீர்ந்து விடுகின்றன.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொலைக்காட்சிகள் வழங்கி வந்தன. எல்லோரும் வீட்டில் இருந்தபடியே லைவ் ஆக பார்த்துக்கொண்டிருந்தனர். தவிர, வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் வழியாகவும் முடிவுகளை தெரிந்துகொண்டனர்.

அப்படி இருந்தும், இன்றைக்கு காலையில் கடைக்கு போனா, ஒரு பேப்பரும் கிடைக்கல. எல்லாம் விற்றுத்தீர்ந்துவிட்டன. ஒரு கடையில்தான் இப்படி என்றால், அந்த ஏரியாவில் உள்ள எல்லா கடையிலும் இதே நிலைமைதான். விசாரிச்சப்பதான் தெரிஞ்சது.பல ஏரியாவிலும் இதே நிலைமைதான்.

டிவி, வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால், எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் பிரிண்ட் மீடியாதான் என்றால் அதில் மிகையில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே