Daily Horoscope, June 30 : இன்றைய ராசி பலன்கள் (30 ஜூன் 2020)

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…
​மேஷ ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.

பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள் எடுக்கும்.

முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையக் கூடிய நல்ல நாள் ஆகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பெண்களுக்கு இனிமையான வாழும் குடும்பத்தில் அமைதி தவழும். பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
​ரிஷப ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும், சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். உத்தியோகத்திலிருந்து சொந்த தொழிலுக்கு மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு சிறிது கால தாமதமாக வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. இவை தொடர்பான வைத்திய முறைகளை இன்று ஆரம்பிக்கலாம் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும்.
​மிதுன ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் குடும்பத்தை வெளிநாட்டிற்கு அழைத்து கொள்வதற்கோ அல்லது அவர்கள் தாய் நாடு திரும்பி குடும்பத்துடன் சேர்வதற்கான வாய்ப்பு களை உண்டாக்கும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மனைவியின் மனதை புரிந்து கொள்ளாத கணவனும் கணவனின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத மனைவியோ இருந்தால் அவர்களுடைய எண்ணங்கள் நேர்கோட்டில் பிரயாணிக்க வாய்ப்புள்ள நாளாக இன்றைய நாள் அமையும்.

மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் விருத்தியாகும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோனியமாக இருக்கும்.
​கடக ராசி :
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். ஒரு சிலருக்கு ஆடை ஆபரண சேர்க்கை வாகன வசதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு நல்ல நாளாகும். கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.

சட்டப்படிப்பு கணக்குத் துறை வங்கித் துறை பொறியியல் துறைகளில் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் ஏற்றமான சூழ்நிலையை காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும். உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். பொருளாதார பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
​சிம்ம ராசி:
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உங்கள் திருமணம் தொடர்பான விஷயங்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புள்ள இனிய நாள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் விசா தொடர்பான காரியங்களை துவக்குவதற்கு சரியான நாளாகும்.

இவ்வகையான காரியங்களிலிருந்து நல்ல தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு கல்வி மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்திற்கான சேமிப்பு மற்றும் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளும் எண்ணங்களும் ஏற்படும். இவைகளில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான வழிகளில் ஆதாயம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் தவழும் மன மகிழ்ச்சி உண்டாகும்.
​கன்னி ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தொழில் முன்னேற்றமும் உத்தியோக முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான நாள் ஆகும் மன நிம்மதி பெறுவீர்கள்.

நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவதற்கு சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருமண வாய்ப்புகள் கனிந்து வருவதற்கான நல்ல நாள் ஆகும். உறவினர்களால் அனுசரணையும் ஆதரவும் தனவரவும் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஆடை ஆபரணச் சேர்க்கை சேர்வதற்கு நல்ல நாள் ஆகும்.

​துலாம் ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல்நல ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிரயாணங்களால் வெற்றி உண்டாகும் என்பதால் பயணங்களை மேற் கொள்ளலாம்.

குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும் தொழில் ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
​விருச்சிக ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பயணத்தால் முன்னேற்றம் உண்டாகும் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். சட்ட ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான நல்ல நாள் ஆகும்.

பெற்றோர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு மேம்படும் இன்னியம் அதிகரிக்கும் பெண்களுக்கு மிகச் சிறந்த நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
​தனுசு ராசி :
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி காண்பார்கள். சொந்த தொழில் முயற்சிகள் வெற்றியடையும் கூட்டுத் தொழில் செய்பவர்கள்.

ஆதாயம் நண்பர்கள் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும் அன்னியோன்னியம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகள் முடிவடைவதாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள்.
​மகர ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். எதிர்காலத்திற்கான சேமிப்பு பற்றி திட்டமிடுவீர்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஒரு சிலருக்கு ஆடை ஆபரண சேர்க்கை போன்றவை உண்டாகும். வீடு கட்டும் முயற்சிகள் சொத்து வாங்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள் அதற்காக கடன் பெறவும் நேரிடலாம். இருப்பினும் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள்.

மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும். சந்தோஷமும் உண்டாகும் சமுதாயத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு மரியாதையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
​கும்ப ராசி:
அன்பர்களுக்கு இந்த இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் இறுதியில் மன நிம்மதி பெறுவீர்கள். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

உங்கள் முழு கவனத்தையும் தொழிலில் செலுத்த வேண்டியது வரும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.

பெரியவர்களுடன் அனுசரித்துச் செல் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். சற்று கூடுதல் கவனம். கல்வியில் செலுத்தினால் மேலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டு இருப்பவர்களுக்கு செலவினங்கள் அதிகமாக வாய்ப்பு உண்டு என்றாலும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.
​மீன ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளிலிருந்து வந்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும் இவைகளில் வெற்றி பெறுவீர்கள்.

எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்புண்டு கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாக வாய்ப்புண்டு. சுபகாரியத்தை பற்றிய சிந்தனைகள் அதிக அளவில் இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைவதாகவும் இருக்கும்.

பெண்களுக்கு இனிமையான நாளாகும். தங்கள் தாய் வீடுகளில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அல்லது உறவினர்களின் வருகை இருக்கும். சுய தொழில் முயற்சிகளில் முன்னேற்ற பாதையை நோக்கி செலுத்துவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கப் பெறுவார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே