தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கிருஷ்ணகிரியில் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு சசிகலா சென்னை வந்துகொண்டிருக்கிறார்.

தற்போது கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அருகே வந்து கொண்டிருக்கிறார். அங்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அங்கு அன்புக்கு நான் அடிமை என்ற பாடலை மேற்கொள் காட்டி சசிகலா பேசினார்.

கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது.

விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை.

தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்றார்.

மேலும் அவர் பேசுகையில் ,எம் ஜி ஆர் வழிவந்த ஓர்தாய் வயிற்று பிள்ளைகள், ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

மிகவிரைவில் உங்களை சந்திக்கிறேன். சந்திக்கும்போது அனைத்தையும் கூறுகிறேன் என்று பேசியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே