ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி ராஜ்கோட்டில் ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திரா என்னும் தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக “ராஷ்ட்ரிய ஸவ்ச்சதா கேந்திரா” என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் திறந்து வைத்துள்ளார்.

தூய்மை இந்தியா குறித்த அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக இந்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை 2017ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது.தேசிய தூய்மை மையம் காந்தியின் தூய்மைக்கும் அதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியர்களின் மகத்தான உறுதியுக்கும் ஒரு இடத்தைப் பற்றி பேசுகிறது. 

இந்த மையத்தில், சத்தியாக்கிரகத்தின் தூண்டுதலுடன் ஸ்வச்சகிரகாவின் பயணம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளது. திறந்து வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்,வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் .

கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே